கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன்பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சிலதளர்வுகளும்தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் வினய்தெரிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்கலாம், ஆனால் தனிமனிதஇடைவெளியை தவறாமல் கடைபிடித்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.