வாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் வட்டாட்சியர் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் இனிமேலும் யாரும் அத்துமீறி நுழையாமல் இருக்க 24 மணி நேரமும் முகவர்கள் இருக்க அனுமதி கோரினர் வேட்பாளர்கள். இந்த கோரிக்கையை ஏற்று வாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.