/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-police-art_0.jpg)
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்ஷேக்தாவூத். துணி வியாபாரியான இவர், கடந்த 12 ஆம் தேதி இரவு தனது மனைவியுடன்காரில்பண்ருட்டிநோக்கிச்சென்றுகொண்டிருந்தார். காரை ஓட்டுநர் அபுபக்கர்சித்திக்(வயது 27) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மேலூர் அருகே உள்ளதிருச்சுனைஎன்னும் இடத்தில்போலீஸ்தோற்றத்தில் உடை அணிந்த 2 பேர் காரை நிறுத்திஷேக்தாவூதுதனது பையில் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தையும், அவரிடம்இருந்தசெல்போனையும்பிடுங்கிக்கொண்டு அவர்கள் வைத்திருந்தஇருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்துஷேக்தாவூதுபோலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்,இச்சம்பவத்தில்ஈடுபட்டகொள்ளையர்களைத்தேடி வந்தனர். கொள்ளையர்களால் பறிக்கப்பட்டஷேக்தாவூத்தின்செல்போன்சிக்னலைகொண்டு ஆய்வு செய்தபோது அந்த செல்போனானது புதூர்பகுதியில்உள்ளதாகக் காட்டி உள்ளது. அதனைத்தொடர்ந்து போலீசார், ஷேக்தாவூத்திடம் புதூரில் யாராவது தெரிந்தவர்கள் உங்களுக்கு உள்ளனராஎனக் கேட்டபோது தனதுகார்ஓட்டுநர் அபுபக்கர் சித்திக்புதூர்பகுதியைச் சேர்ந்தவர் தான்எனத்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனிப்படைபோலீசார்சந்தேகத்தின் பேரில்டிரைவர்அபுபக்கர்சித்திக்கைபிடித்து விசாரித்த போது, அவரது சகோதரர்சதாம்உசேன் (வயது 32),அசன்முகமது (வயது 30),பார்த்தசாரதி (42), மதுரை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் மானாமதுரைபகுதியைச்சேர்ந்த நாகராஜன்( வயது 39) ஆகியோர் சேர்ந்துஷேக்தாவூத்திடம்இருந்துபணத்தைகொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து அபுபக்கர்சித்திக், ஆயுதப்படை காவலர் நாகராஜன் உட்பட ஐந்து பேரையும்போலீசார்கைது செய்தனர். போலீசார்நடத்திய தீவிர விசாரணையில்கார்ஓட்டுநர் அபுபக்கர் சித்திக் கொடுத்த தகவலின்படி திட்டமிட்டு இந்தகொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)