
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்ட நிலையில் கடந்த வருடம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு திருவிழா நடைபெற்றது.
சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் ஒன்று கூட, தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். அண்மையில் நடந்த ஐபிஎல் போட்டிகளை காண வந்த இளைஞர்கள் 'தோனி கம் டூமதுரை சித்திரை திருவிழா' எனபதாகைகளை காட்டி அழைப்புகளை விட்டிருந்தனர்.

இப்படி மதுரை சித்திரை திருவிழாவிற்கான புரொமோசன்கள் தொடங்கியுள்ள நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5 ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
Follow Us