Advertisment

பெண் சிசுக்கொலை தலைதூக்குவது வேதனை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன், சௌமியா தம்பதிக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், 32 நாட்களே ஆனஅந்தகுழந்தைக்கு பெற்றோர்களேஎருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம், அந்த மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

MADURAI CHILD INCIDENT DMK PRESIDENT MK STALIN TWEET

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக்பக்கத்தில், "பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.

Advertisment

கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

CHILD INCIDENT madurai mk stalin TWEET
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe