Advertisment

சிறை அருகே குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி! 

madurai central prison police investigation

மதுரை மத்திய சிறைச்சாலை முன்பு குப்பைத் தொட்டியில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறையின் அருகில் அமைந்திருக்கும் சிறைக் காவல் கண்காணிப்பாளர் இல்லம் அருகே உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஒரு பிளாஸ்டிக் பைக்குள் கைத்துப்பாக்கி இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து அருகிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, சிறைக்காவல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன், அங்கு வந்து விசாரணை நடத்தினார்.

Advertisment

குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியைக் கைப்பற்றிய காவல்துறையினர், அது ஏர்கன் வகையைச் சேர்ந்தது எனக் கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்கும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அவ்வழியாக சென்ற சந்தேகத்திற்குரிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Prison madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe