Advertisment

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை

madurai bjp obc district secretary incident

Advertisment

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு மதுரை மாவட்டச் செயலாளராகப்பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வண்டியூர் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று திடீரென்று சக்திவேலை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

police madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe