Madurai BJP AND VCK issue

Advertisment

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க பா.ஜ.கவினர் வந்தனர். இதை அறிந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், அதைத் தடுக்க முயன்றபோது இருதரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டம் உருவாகியது. பின், வி.சி.கவினர் பிரதமர் மோடியின் படங்களை எரித்தும் பா.ஜ.க.வினருக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். மேலும்,மனு ஸ்மிருதி நூலை தடை செய்யவேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.