குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராடி வரும் நிலையில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன் என்று சொன்ன ரஜினியை கலாய்த்து சமூக வலைதளங்கள் அனைத்திலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு மீம்ஸ் கிரியேட்ர்ஸ் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை நகரில் நடிகர் வடிவேலிடம் உதவியாளராக இருந்த பாவாவின் ஆதரவாளர்கள் 'பாவா இங்கே? ரஜினி எங்கே?... வேண்டாம் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சி.ஏ.ஏ.,' ஆகிய வாசகங்கள் அடங்கிய போஸ்டரை மதுரை நகரெங்கும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.