madurai barber shop owner daughter education cm palanisamy announced

ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு, நோய்த் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

madurai barber shop owner daughter education cm palanisamy announced

இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடித்திருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தைத் தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்காலப் படிப்பிற்குச் சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்குச் செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர்க்கல்விச் செலவை அரசே ஏற்கும். நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி தமிழ்நாடு, இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்திட வேண்டும்." இவ்வாறு முதல்வர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ராவின் சேவையை 'மான் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.