Skip to main content

பாலியல் வன்கொடுமையை தடுக்க அரபு நாடுகளைப்போல சட்டம் வேண்டும்; மதுரை ஆதீனம்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

தமிழகத்தையே நிலைகுலையச் செய்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு அரபு நாடுகளைப் போல மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் மதுரை ஆதீனம்.

 

கடந்த சில நாட்களாக தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் அதிமுக அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிகள், கல்லூரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

pp

 

இந்த சூழ்நிலையில், சபல சாமியாரான நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்து,  பிறகு பல எதிர்ப்புகளால் வெளியேற்றிய பிரபலமான மதுரை ஆதினம் பொள்ளாச்சி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

 

அதில், " பாலியல் துன்புறுத்தலை அதிமுக,திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகின்றனர். அதில் எந்தக் கட்சிகளும் கருத்து வேறுபாடு இல்லை. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களை அழித்து ஒழிக்க வேண்டுமானால் அரபுநாடுகளில் நடமுறையில் இருக்கும் சட்டத்தைப்போல  இந்திய நாட்டில் அமல்படுத்தப்பட வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். அதையே நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இதைத்தவிர வேறு வழியே இல்லை.

 

 

பொள்ளாச்சியில் மாணவிகள் இளம்பெண்கள் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளையும் துரிதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் . பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள நபர்கள் யாராக இருந்தாலும்,  அவர்களுக்கு அரபு நாடுகளைப்போல மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்." என்று கூறியிருக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''நீங்க வம்ப விலைக்கு வாங்குறீங்க... எடுத்துட்டு போயிருங்க...''-ஆவேசமான மதுரை ஆதீனம்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

n

 

தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மனுசாஸ்திரம் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்தவரிடம் மதுரை ஆதீனம் 'ஆரம்பிச்சுட்டாங்க...' என்று சைலன்ட் மோடில் சொன்னார். 'ஒரு இந்துவாக ஆ.ராசாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்' என செய்தியாளர் கேள்வியை முடிக்க, அதற்கு பதிலளித்த மதுரை ஆதீனம்,  ''நான் எதும் சொல்றதுக்கில்ல... நீங்க வம்ப விலைக்கு வாங்குறீங்க... டிவி வேண்டாம் டிவி வேண்டாம் நீங்க எடுத்துட்டுபோங்க ( பேட்டி வேண்டாம் என்பதை  டிவி வேண்டாம் என வெளிப்படுத்தினார்) நான் உங்கள கூப்டேனா... எப்படி பேசுறாங்க பாருங்க...'' என ஆதீனம் அங்கிருந்தவர்களிடம் முறையிட்டார். பின்னர் ஆதினம் சார்பில் அங்கு இருந்தவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் உடனே பேட்டியை முடித்துக்கொண்டு எழுந்து சென்றார் மதுரை ஆதீனம். இதனால் அந்த இடம் சற்று பரபரப்பானது. 

 

 

Next Story

''இந்த நடிகர் படத்தை மட்டும் பார்க்காதீர்கள்... இத சொன்னா சங்கினு சொல்றாங்க''- மதுரை ஆதீனம் பேச்சு!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

 '' Do not watch only this actor's film ... tell this to Sangin '' - Madurai Aadeenam talk!

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''சமீபத்தில் தொலைக்காட்சியில் படம் ஒன்றை பார்த்தேன். விஜய்னு ஒரு நடிகர் நடிச்ச படம். அதில் அந்த நடிகர் சொல்கிறார் ''புள்ளையாரே... புள்ளையாரே... உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குதுனு' சொல்றாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படி சொல்லுவாரு. அவர் படத்தை பார்க்காதீங்க. இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கினு சொல்கிறார்கள். அடப்பாவிகளா... பாரதி சொன்னார் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே'. இப்பொழுது பாரதி இருந்திருந்தால் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே' என்று சொல்லியிருப்பார். 

 

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னது திருமூல திருமந்திரம். எல்லாம் அண்ணா சொன்னது என்கிறார்கள். பரவாயில்லை திருடி எடுத்துப் போட்டாலும் சந்தோசம். இப்படியெல்லாம் ஆன்மீகத்திலிருந்து திருடிக் கொள்கிறார்கள். திருடிக்கொண்டு திராவிடம் திராவிடம் என பேசிக்கொள்கிறார்கள்'' என விமர்சித்தார்.