Published on 14/09/2021 | Edited on 14/09/2021

மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி எனப் பெயர் சூட்டக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (14/09/2021) நீதிபதிகள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதுரை விமான நிலையத்திற்குப் பெயர் வைப்பது பற்றி தமிழ்நாடு அரசு எந்த பரிந்துரையும் அனுப்பவில்லை. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் பெயர் மாற்றம் மேற்கொள்ள முடியும்" என வாதிட்டார்.
இதையடுத்து, இது போன்ற வழக்குகளை ஊக்கப்படுத்த முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.