MADURAI AIRPORT

Advertisment

மதுரை விமான நிலையத்திலிருந்து நேற்று(4/6/2020) 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவரின் உடமைகளில் 5 உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டா குப்பிகளும், 3 உபயோகப்படுத்தப்படாத துப்பாக்கி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் புகாடியா லெஷ்மி லாவன்யா (வயது 41) என்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. துப்பாக்கி தோட்டக்கள் அவரிடம் எப்படி வந்தது, உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டதா, அவருக்கு நக்ஸல் அமைப்பு போன்ற ஏதேனும் அமைப்புகளுடன் தொடர்பா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பெருங்குடி காவல் நிலையத்தில் ஆந்திரப் பெண் மற்றும் அவரிடமிருந்த துப்பாக்கி தோட்டாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.