madurai airport

Advertisment

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் 12 விமான சேவைகளில் 10 விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.

61 நாட்களுக்குப் பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூர் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 12 விமான சேவைகள் தொடங்கியது.கரோனா நோய்த் தொற்றின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே வேறுபடுவதால் பயணிகள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியுள்ளது.

இதனால் பயணிகள் பலர் பயணிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகி உள்ளது.மேலும் தமிழ்நாட்டுக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கு tn - e pass வாங்க வேண்டியுள்ளது. இதனால் போதிய பயணிகள் இல்லாமல் மதுரையிலிருந்து சென்னைக்கு இரண்டு சேவைகளைத் தொடங்கிய 'இண்டிகோ' விமானம் செவ்வாய்க்கிழமை முதல் தனது சேவையை ரத்து செய்தது.

Advertisment

12 விமான சேவைகளில் தற்போது டெல்லி பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மற்ற மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் சென்னையிலிருந்து மதுரைக்கும், 11.30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கும் இரண்டு விமான சேவைகள் மட்டுமே நேற்று நடைபெற்றது.