Advertisment

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகாரி நியமனம்!

MADURAI AIIMS HOSPITAL SPECIAL OFFICER APPOINTED UNION GOVERNMENT

Advertisment

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சிறப்பு குழு உறுப்பினராக ஐ.ஐ.டி. சென்னையின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அரசாணையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

MADURAI AIIMS HOSPITAL SPECIAL OFFICER APPOINTED UNION GOVERNMENT

மத்திய அரசின் அரசாணையில், ‘அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956 (All India Institute Of Medical Sciences- AIIMS) மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2012-ன் படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் ஐ.ஐ.டி. சென்னை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். அதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்வி தொடர்பான நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் பாஸ்கர் ராமமூர்த்தி செயல்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI IIT Special Officer madurai AIIMS hospital
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe