/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai 4334343.jpg)
சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்த மதுரை ஆதினம் (வயது 77) இன்று (13/08/2021) காலமானார்.
மதுரை ஆதீனத்தின் 292- வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் ஆகஸ்ட் 9- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிர் பிரிந்தது.
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவ திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். தமிழ்த் தொண்டு, ஆன்மீகத் தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டு வந்தார். மதுரை ஆதீனத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தான் சரி என்று நினைக்கக் கூடிய அரசியல், சமூக கருத்துகளையும் முன் வைத்தவர். முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தவர் மதுரை ஆதீனம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)