Skip to main content

கூடல்நகரில் தன் உயிரைப் பணயம் வைத்து எஜமானன் குடும்பத்தைக் காப்பாற்றிய ஜீவன்

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரு குடும்பத்தினர்,  சுமார் ஒன்றரை வயதான புல்லி குட்டான் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றினை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.  பெண் நாயாக இருப்பதனால் குடும்பத்தினரிடம் அதிக அளவு பாசத்துடன் இருந்து வளர்ந்து வந்துள்ளது. யாரையும் அவ்வளவு எளிதில் வீட்டில் நுழைய விடாமல் காவல் காப்பதிலும் படு கில்லாடியாக இருந்து வந்துள்ளது.
 

d

 

 

 

 

இந்த  நிலையில் நேற்றைய தினம் குடும்பத்தினர் வீட்டில் தங்களுடைய வேலையில் மூழ்கி இருந்த சூழ்நிலையில், தாரா என்ற பெயர் கொண்ட அந்த நாய் வழக்கத்துக்கு மாறாகப் பயங்கரமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. காம்பவுண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது. இதைப் பார்த்த குடும்பத்தினர் வெளியே வருவதற்குள் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் செட் பகுதிக்குள் சென்றது அந்த நாய்.
 

d

 

குடும்பத்தினர் யாரையும் கார் அருகில் நாய் நெருங்க விடவில்லை. தூரத்தில் இருந்தபடியே குடும்பத்தினர் பார்த்த போது, கண்ணாடிவிரியன் பாம்பு படம் எடுத்தபடி நின்றுகொண்டிருந்தது. நாய் தாரா உடனடியாக கட்டுவிரியன் பாம்பை கடித்து குதற ஆரம்பித்தது. இதை, சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் பாம்பிடம் இருந்து நாயினைக் காப்பாற்ற முயன்று,  சண்டையைத் தடுத்து விட முயன்றனர். ஆனால், தாரா இறுதிவரை குடும்பத்தினரை நெருங்கவிடாமல் சண்டையைத் தொடர்ந்தது. இதில் கட்டுவிரியன் பாம்பு நாயின் முகத்தில் ஆக்ரோஷமாகக் கொத்தி விஷத்தைச் செலுத்தியது. 
 

http://onelink.to/nknapp

 

நாய் கடித்ததில் பாம்பு அந்த இடத்திலேயே இறந்து விட்டது. இதனைத்தொடர்ந்து சில நிமிடங்களில் நாய் தாரா மயக்க நிலைக்குச் சென்றது. தனால் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவர் டாக்டர் மெரில்ராஜை தொடர்புகொண்டனர். அவர் சொன்னபடி தாராவைத் தூக்கிச் சென்றனர். அங்கு விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு நாய் தீவிர காண்காணிப்பில் இருந்தது. தற்பொழுது சிகிச்சை பலனின்றி தாரா  உயிரிழந்தது.
 

பாசமாக வளர்த்த எஜமானர் குடும்பத்தினரைக் காப்பாற்ற தன்னுயிர் தந்த தாராவின் தியாகம் குறித்து அப்பகுதியினர் நெகி்ழ்ச்சியாகப் பேசி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்