Skip to main content

 காளைமாட்டுஜோசியம் பலிக்கவில்லை! இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன்னு சொன்ன மதுரை ரமணா மெஸ் அதிபரின் பரிதாபக்கதை!

 


மதுரையில் பிரபலமான ஹோட்டல் ரமணாமெஸ். நான்கு கிளைகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் அந்த ஓட்டல் அதிபர் செந்தில் திடீரென குடும்பத்தினருடன் மாயமாகியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற விபரம் எவருக்கும் தெரியவில்லை.  பாடாய்ப்படுத்திய மாட்டுஜோசியம்தாம் இதுக்கெல்லாம் காரணம் என்று செந்தில் 450 மாடுகள் வாங்கி வளர்த்த கதையை சொல்கிறார்கள்.


 

m

 

மதுரையில் ரமணா மெஸ் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி, மக்களிடையே பெயர் பெற்றதால், நான்கு கிளைகளையும் துவங்கி நடத்தி வந்தார்.  செந்திலுக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை.  தொழிலில் இன்னும் உச்சத்தை தொடவேண்டுமென்றால் உலகின் எல்லா திசைளிலிருந்தும் மிக விலை உயர்ந்த காளை மாடுகளை வாங்கிக்கொண்டே இருந்தால் செல்வமும், புகழும், தொழிலும் உலகம் முழுவதும் பரவ தொடங்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி, அதன்படியே செய்தார்.    450 மாடுகள் வாங்கி பெரிய அளவில் பண்ணை வைத்து பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலில் இவரது காளைகள் மக்களை கவரும். ஆனால், போட்டியில் பங்கேற்காது.  மாடுகளுக்கு ஏதும் ஆகிவிடும் என்பதுதான் அதற்கு காரணம்.  இவரது ஓட்டலிலும் மாடுகளின் புகைப் படங்களையே பிரேம் செய்து மாட்டியுள்ளார்.  தனது வெற்றிக்கு காரணமும் மாடுகள் என்றே சொல்லிவந்துள்ளார்.   

செந்தில்

ச்

மாடுகளின் ராசியால் பெரும் செல்வந்தர் ஆகி இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன் என்றெல்லாம் சொல்லி வந்துள்ளார்.  ஆனால், இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை.


செந்தில் காணாமல் போனதிலிருந்து யாரும் இதுவரை போலிஸில் புகார் கொடுக்கவில்லை.  வாட்ஸ்-அப்பில் செந்திலின் நண்பர் ஒருவர்,  ரமணாமெஸ் உரிமையாளர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கிருக்கிறார்.  அவரை மிரட்டி சொத்தை வாங்க குடும்பத்தோடு கடத்திருக்கிறார்களா? இல்லை அவரது குடும்பத்தையே கொன்றுவிட்டார்களா?   என்று பதிவிட்டுள்ளார்.

 

 இதன் பின்னர், ஓட்டல் தொழிலில் உச்சத்தை இருக்கும் செந்தில்குமாரிடம், கிரைணைட் கோபாலகிருஷ்ணன் என்பவர்,   தொழிலை தமிழகம் எங்கும் விரிவுபடுத்த சிறிது சிறிதாக பணம் கொடுத்து உதவுவதுபோல் ஐந்து கோடிவரை கொடுத்தபின்பு ஆட்களை வைத்து மிரட்டி அவரின் 250 மாடுகளை பிடித்து கொண்டு ஓட்டலையும் எழுதிவாங்க அவரை கடத்தி வைத்துள்ளார் என்று செய்திகள் வந்தன. 

 

 இது குறித்து நாம் கோபாலகிருஷ்னனை தொடர்பு கொள்ள வழக்கறிஞர்  அகஸ்டினிடம் பேசினோம். ’’ஓட்டலை நாங்கதான் நிர்வகித்து வருகிறோம்.   நாங்க ஏன் சார் கடத்தணும். அவர்தான் எங்களிடம் வந்தார். நான் வெளியில் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கிருக்கிறேன்.

 

 என் கடனை அடைக்கவேண்டும். நீங்களும் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.  என்னிடம் 5 கோடியை செந்தில் வாங்கிகொண்டு ஒரு பாட்னர்சிப் டீல் 1-8-2019ல் மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். அதில் என்னவன்றால் நாங்கள் கொடுத்த பணத்தை வைத்து ரமணாமெஸ் பெயரில் வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதுதான் டீல்.  ஆனால் என் பணத்தையும் வாங்கிகொண்டு மொத்தமாக எஸ்கேப் ஆகிவிட்டார்.  எனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பனமோசடி புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்.

 

 

ஓட்டலில் வேலைபார்க்கும் நபர் நம்மிடம்,   ’’சார், என்னோட பெயரில் வங்கி கணக்கு ஓப்பன் பண்ணி 2 லட்சம் கடன் வாங்கிருக்கிறார் செந்தில்.  மேலும் இது போல் 180 பேர்கள் பெயரில் வங்கியில் தலா 2 லட்சம் வீதம் கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார் ரமணாமெஸ் உரிமையாளர் செந்தில்’’ என்று பரிதாமமாக வங்கி கணக்கு புத்தகத்தை காண்பிக்கிறார்.

 

 இதுபற்றி காவல்துரை வட்டாரத்தில் விசாரித்தபோது  ”செந்தில்குமார் தரபில் யாரும் புகார் கொடுக்கவில்லை.  அவரின் பங்குதாரரான கோபலகிருஷ்ணன் மட்டுமே செந்தில் மேல் புகார் கொடுத்திருக்கிறார்.  இதுகுறித்து செந்திலின் உறவுகளிடம் விசாரித்து வருகிறோம்.  அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல் எடுத்து வருகிறோம்.  விசாரனை போய்கொண்டு இருக்கிறது என்று முடித்துக்கொண்டார்.

 

செந்தில் குமாரின் உறவினர் நம்மிடம்,   ’’அவர் எங்களுக்கு சொந்தம்தான் சார். மதுரையில் ரமணா  மெஸ் அமைத்து தொழிலில் உச்சத்தை தொட்டபோது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.  எப்படி இவரால் இந்தளவுக்கு வரமுடியும் என்று நினைத்தோம்.  கடைசியில் கந்துவட்டி வாங்கித்தான் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.  
 

கோடி கணக்கில்  கடன் வாங்கியிருக்கிறார் என்று தெரியவருகிறது.  அவரால் அதை அடைக்கவே முடியவில்லை. அந்த பணத்தையெல்லாம் இந்தியா முழுவதும் சுற்றி சுற்றி விலை உயர்ந்த 450 மாடுகளாக வாங்கி குவித்திருக்கிறார்.  ஒவ்வொரு மாடும் மூன்று லட்சம் நான்கு லட்சம் இருக்கும்.   250 மாடுகளை கடன் கொடுத்தவர்கள் ஓட்டிகொண்டு போய்விட்டார்கள்.

 

 தன் ஜாதகத்தில் கடன் வாங்கிதான் தொழில் செய்யமுடியும் என்றும், மாடுகள் வாங்க வாங்க அனைத்து கடனையும் அடைத்து நாட்டுக்கே கடன் கொடுப்பேன் என்றும் சொல்வார்.  இப்போது  எல்லாம் தலைகீழா நடக்குது.  அவராக குடும்பத்தோடு தலைமறைவா? கடன் கொடுத்தவர்கள் கடத்திவிட்டார்களா? இல்லை வேறு எதுவும் நடந்திருக்கா? என்று புரியவில்லை’’ என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்