m

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் - மகள் இருவரும் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற ஆயிஷா நம்மிடம், "என் மகள் ஸ்வேதாஸ்ரீயை பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தியதால், அதை தட்டிக்கேட்டதால் அதிமுக 33வது வட்ட பிரதிநிதி இளங்கோ, மனைவி முத்துமாரி, வெங்கடேசன் ஆகியோர் கடந்த 14ம்தேதி நான் குளித்து கொண்டு இருக்கும்போது என்னை நிர்வாணமாக வெளியே இழுத்து சென்றனர். பொதுமக்கள் முன்னிலையில் என் மானம் போனதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் மறுபடியும் என்னை அடித்ததால் ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்துடன் தீக்குளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றவரை போலிஸார் காப்பாற்றி கைது செய்து வேனில் ஏற்றினர்.

m