Skip to main content

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - நோட்டீஸ் அனுப்பிய தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம்!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

MADRAS IIT STUDENT INCIDENT National List Welfare Commission sends notice!

 

சென்னை ஐஐடியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஐஐடி இயக்குனர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பைப் படித்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சக மாணவர்,  கைடுகள், பேராசிரியர் என எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்