சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த மாணவி பாத்திமா, தனது விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தனது மகள் இறப்பு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபியை சந்தித்த பின் மாணவியின் தந்தை லத்தீஃப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

madras iit college student fathima latheef incident parents meet dgp and cm for today

"மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதியளித்துள்ளார். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கப்படுவர் என்று உறுதி தந்தார்கள். தனது மகளின் மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் என் மரணத்திற்கு காரணம் என மகள் குறிப்பு எழுதியுள்ளார். எனது மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு தான் இறந்துள்ளார். ஆனால் எப்.ஐ.ஆரில் குறிப்பிடவில்லை. நாங்கள் வந்து பார்த்த போது அறையில் கயிறு இல்லை. அந்த அறைக்கு சீல் வைக்கவும் இல்லை. எனது மகள் பாத்திமாவிற்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை பார்த்தபோது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை.

Advertisment

madras iit college student fathima latheef incident parents meet dgp and cm for today

எந்த ஒரு காரியத்தையும் கடிதமாக எழுதி வைப்பார் பாத்திமா. அதேபோல இதையும் செய்துள்ளார். எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவர். எல்லா பாடங்களிலும் முதல் இடத்தில் இருந்தார். எனக்கு துன்புறுத்தல் நடைபெறுவதாக தினமும் என்னிடம் பேசுவார் பாத்திமா. நவம்பர் 8- ஆம் தேதி இரவு ஒரு மணி நேரம் ஐஐடி கேண்டீனில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளார் பாத்திமா. தமிழகத்தில் என் மகளுக்கு கொடுமை நடந்துள்ளது. இதுபோன்று இனிமேல் யாரும் மரணமடையக்கூடாது. ஐஐடியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை தரக்கோரினோம். ஆனால் தர மறுக்கின்றனர். பாத்திமாவின் செல்போன் போலீஸ் வசம் உள்ளது. அதை பெற்றோர் முன்னிலையில் அன்-லாக் செய்ய வேண்டும். தமிழக அரசையும், டிஜிபியையும் முழுமையாக நம்புகிறேன். முழுமையான விசாரணை நடக்கும் என நினைக்கிறேன்" என்றார்.

டிஜிபியை தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை, ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப் சந்தித்தார். அப்போது தனது மகள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.