சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் (RESIDENTIAL ASSISTANT) பணி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 180 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை (15/05/2019) அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டார். அதில் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், கடிதம் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login ஆகும். பொதுப்பிரிவினருக்கு (OBC/GENERAL) தேர்வு கட்டணம் - ரூபாய் 500 , எஸ்சி / எஸ்டி (SC/ST) பிரிவினர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தை இணையதள (DEBIT CARD, CREDIT CARD, INTERNET BANKING) வழியில் செலுத்தலாம்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இணைய தள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/05/2019.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12/06/2019.
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 14/06/2019.
வீட்டு உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 15000 முதல் 50000 வரை பெறுவர். இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு :https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணைய தளத்தை அணுகலாம்.