Madras High Court Question to Kaniyamoor School Management

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைதீக்கிரையாக்கப்பட்டன.

மாணவர்களின் நலன் கருதி பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை தரப்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில்,ஒரு மாதம் 9 முதல் 12 வகுப்பு வரைநேரடி வகுப்புகள் சோதனை முறையில் நடத்த அனுமதி அளித்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகபள்ளியில் எந்தப் பிரச்சனையும்ஏற்படவில்லை.அதனால்மற்ற வகுப்புகளையும் செயல்பட அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில்கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், பள்ளி திரும்பும் மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த பள்ளிநிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது எனஉயர்நீதிமன்றம்கேள்வி எழுப்பியுள்ளது.