Advertisment

குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்  

Madras High Court order revoked Gutka pan masala ban order quashed

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலாஉள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத்தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆண்டுதோறும் இந்த உத்தரவு தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மீறியதாகக் கூறி சில நிறுவனங்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டவில்லை. சிகிரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள்விளம்பரத் தடைச் சட்டத்தை பொறுத்தவரைக்கும், புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்துதலை முறைப்படுத்துவதுபற்றித்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

மேலும் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை என்றும், தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம் உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு ஆணையர் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்தஉத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

tngovt gutka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe