Advertisment

“ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லக் கட்டுப்பட்டவர் அல்ல” - சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court dismissed the petition against  Governor rn ravi

ஆளுநருக்கு எதிராகத்தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகப்பதவி வகித்து வருகிறார்.ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிப்பதால்,எந்தத்தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்க வேண்டும் என்றும், அவர்பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறிதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பதவியில் இருக்கும் ஆளுநரோ, குடியரசு தலைவரோநீதிமன்றத்திற்குபதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று கூறிஉச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி இந்த மனுவைத்தள்ளுபடி செய்துள்ளது.

governor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe