/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-add-judge-1.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செந்தில்குமார், அருள்முருகன் ஆகிய இருவரும் இன்று (16.10.2023) சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உடன் இருந்தனர். கூடுதலாக 2 நீதிபதிகள் பதவியேற்றதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)