Advertisment

காமராஜ் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Madras HC Question What action was taken  complaint against Kamaraj

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர். காமராஜ் விநியோக திட்ட உணவுப்பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பானவழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காமராஜ் தொடர்பான புகார் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் இன்னும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை விரிவான அறிக்கை தாக்கல் செய்யத்தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 17 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

admk Kamaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe