Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மத்தியப்பிரதேச முதல்வர் சாமி தரிசனம்!

Madhya Pradesh Chief Minister Sami darshanam at Chidambaram Nataraja temple

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.சனிக்கிழமை(1.6.2024) காலை திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் 11.50 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார்.

இவரை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கோவில் தீட்சிதர்கள் கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கோவிலில் 12 மணிக்கு பூஜை முடிவடைந்ததால் கோவில் கருவறைக்கு முன்புள்ள கனகசபையில் ஏற அனுமதிக்கவில்லை. பின்னர் இவர் கனக சபையின் கீழே இருந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

Madhya Pradesh Chief Minister Sami darshanam at Chidambaram Nataraja temple

Advertisment

பின்னர் கோவில் பிரகாரங்களை சுற்றி வந்து தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் முதல்வரின் குடும்பத்தினரை கோவில் தேவசபை முன்பு அமர வைத்து மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கோவில் சிறப்பு விருந்தினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கோவிலுக்கு புறப்பட்டார். கோவில் மற்றும் ஹெலிகாப்டர் தளத்தில் சிதம்பரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe