Advertisment

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைந்த சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தங்களது பணியை நிரந்தரம் செய்யக்கோரியும் சங்கத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இன்று (04.02.2021) முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் “மே மாதம் ஊதியமில்லை, மே மாதம் முழுவதுமே பட்டினியே” , “10 ஆண்டு வேதனை எங்களுக்குப் போதாதா, தமிழக அரசே மனம் இறங்கு” என்பன போன்ற பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.