ஆன்லைன் விளையாட்டு யூட்யூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான மதனை கடந்த மாதம் 18ம் தேதி தருமபுரியில் போலீசார் கைது செய்தனர். ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமின்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியாத காரணத்தால் ஜாமின் வழங்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பப்ஜி மதனின் ஜாமின் மனு தள்ளுபடி!
Advertisment