பாஜகவில் இருந்து மதன் ரவிச்சந்திரன், வெண்பா நீக்கம்!

Madan Ravichandran fired from BJP

பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் இன்று (25/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேவேளையில், பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mathan Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe