kamal haasan

மதுரையில் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல். மக்கள் நீதி மய்யம் என தனது கட்சி பெயரை அறிமுகப்படுத்தியதோடு, தமிழகம் முழுவதும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் படிவங்கள் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தின் வெளியே உறுப்பினர் சேர்க்கை அரங்கு நேற்று திறக்கப்பட்டது. அங்கு கட்சியில் சேர விரும்புபவர்களுக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டது. சிலர் அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராகினர்.

Advertisment

மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களிடம் கலந்துரையாடல் செய்கிறார்.