Skip to main content

''அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்''-அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!     

Published on 20/06/2021 | Edited on 20/06/2021
ma subramanian press meet

 

சென்னை பெருங்குடியில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், '' ஆரம்ப காலத்திலேயே, 2017 ஆம் ஆண்டே நீட்தேர்வு கூடாது தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுங்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டினை தெரிவித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றம் செய்து ஒருமித்த ஆதரவை அளித்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக.

 

தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு கொண்டு போனதற்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த எந்த அமைச்சர்களும் குடியரசுத் தலைவரிடம் உட்கார்ந்து நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு நாளும் போகவில்லை. அந்த நிலையில் குடியரசு தலைவர் மறுதலித்தார். அவர் மறுத்தலித்த அந்த தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகமும் திருப்பி அனுப்பிவிட்டது.

 

தீர்மானத்தை திருப்பி அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகத்தை போய் யாரும் ஏன் திருப்பி அனுப்பினீர்கள், எங்கள் உணர்வின் ஒட்டுமொத்த கூப்பாடு அல்லவா இது. சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோமே அதற்கு என்ன மதிப்பளிதீர்கள். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார். நீங்களும் திருப்பி அனுப்புகிறீர்கள் என்றும் யாரும் கேட்கவே இல்லை. அப்போதெல்லாம் கேட்காமல் இருந்து விட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

நீட் வேண்டாம் என்பது திமுகவின் மிக முக்கிய அம்சம். நீட் வந்தபோது முதல் முதலில் அதற்கு எதிராக பல்வேறு கருத்தரங்கை நடத்தியது திமுக. பல்வேறு போராட்டங்களை நடத்தியது திமுக. பல்வேறு இடங்களில் அதை எதிர்த்து குரல் கொடுத்தது திமுக. அந்த வகையில்தான் தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொன்னார்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்டுக்கு  விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று. முதல் நடவடிக்கையாக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவை டெல்லியிலேயே முகாமிட வைத்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகச் சென்று முறையிடவும் செய்தார். 

 

அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தார். அந்த குழு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.