கரோனா தொற்றின் காரணமாக ஓவியர் இளையராஜா உயிரிழந்தார். இச்செய்தி ஓவியக் கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓவியர் இளையராஜாவின் மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில் "தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!" என்று தெரிவித்திருக்கிறார்.