/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/996_106.jpg)
“அந்தப் பொண்ணுஎன்னோட வாழ்க்கையும் அழிச்சிட்டா..அவள சும்மா விடக்கூடாது..” எனப்பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பெண் குறித்து பிரபல கவிஞரும் திரைப்படபாடலாசிரியருமானதாமரை பகிரங்கமாகக்கூறியுள்ள விஷயம்பெரும் பரபரப்பையும்அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இந்தத்தம்பதியின் மூத்த மகன் சிவா என்கிற ரத்தினசீலன். 30 வயது எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். சிவாவிற்கு அவரது பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த விஜி பழனிச்சாமி என்ற பெண்ணுக்கும்சிவாவிற்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜி பழனிசாமி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.
சிவாவிடம் தனக்கு ஏற்கனவே விவகாரத்து ஆனது குறித்துகூறியுள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலிக்கத்தொடங்கியுள்ளனர். ஆனால், விஜியோஏற்கனவே இருமுறை திருமணமானவர் எனச் சொல்லப்படுகிறது. அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்தத்தகவல்களைசிவாவிடம் கூறாமல்விஜி மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, கடந்த ஜூலை 6 ஆம் தேதியன்றுசிவாவும்விஜியும் மருதமலை கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
நாளடைவில்,விஜி பழனிசாமி சில ஆண் நண்பர்களுடன் பழகி வருவதை சிவா அறிந்துகொண்டார்என்றும், அவரது செல்போனில் விஜி தன் ஆண் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாசப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் என்றும் சிவாவின் குடும்பத்தார் சார்பில் சொல்லப்படுகிறது. இதனால்கடும் கோபத்திற்குள்ளான சிவாதன் வீட்டில் இருந்து விஜியை வெளியேற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிவாவின் அலுவலகத்திற்கு சென்ற விஜிஇனிமேல் எந்தத்தவறும் செய்யமாட்டேன் எனக்கூறி அவரது காலில் விழுந்துகதறியுள்ளார்.
அப்போது மனம் இறங்கிய சிவா விஜியை மன்னித்து மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அடுத்த சில நாட்கள் கழித்துஇவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. மேலும், சிவாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அடுத்தடுத்து நடந்த பிரச்சனைகளால்சிவாவும் விஜியும் பிரிந்துள்ளனர்.
அதன்பிறகு, விஜி தன் நண்பர்களை இணைத்துக்கொண்டுசிவாவை உளவியல் ரீதியாக மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால்மனமுடைந்த சிவாஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அப்போது, விஜி குறித்து 43 ஆடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில், “நான் சாக்கடையில் விழுந்துவிட்டேன். என்னால எழுந்துக்க முடியல. என்னோட சாவுக்கு நான்தான் காரணம்..”எனப் பேசிவிட்டுகடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, குடும்பப்பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஏராளமான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருக்கும் விஜி என்பவர் தனது மகனை திருமணம் செய்துகொண்டு மனரீதியாக துன்புறுத்தித் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகாரளித்துள்ளனர்.
இந்த விவகாரம்பூதாகரமான நிலையில், திரைப்பட பாடலாசிரியர் தாமரை கூறிய தகவல்மேலும் பரபரப்பை எகிற வைத்துள்ளது. “என் முன்னாள் கணவர் தியாகுவிற்கும்விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாகஎனதுகுடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த விஜி என்கிற விஜயலட்சுமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என கவிஞர் தாமரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். 37 வயதான பெண்பல்வேறு ஆண்களுடன் சேர்ந்து பழகியதோடு பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)