Advertisment

சொகுசு கார் மோதி விபத்து; பேருந்துக்காகக் காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

Luxury car collision Tragedy befell those waiting for the bus

சென்னையில் அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்னை விமான நிலையம் அருகே சொகுசு கார் ஒன்றுவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடதுபுறம் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மீது மோதிபேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பாய்ந்தது.

Advertisment

இதில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

hospital bus car police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe