Luxury car burned at customs ...

சென்னை ஆவடியில் தொழிற்சாலை வைத்திருப்பவர் சக்கரபாணி. கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக காரில் குடும்பத்தாருடன் சென்றார். அந்தக் காரில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் பயணப்பட்டனர்.

அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் சுமார் 1.40 மணிக்கு பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகே அந்த கார் வந்தடைந்தது. சுங்க சாவடியின் உள்ளே கார் அந்த கார் பணம் செலுத்த நின்றபோது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்தஊழியர்கள் சுதாரித்து, காரின் தீயை அணைக்க முற்பட்டனர்,முடியவில்லை. பின்னர் பளூ தூக்கும் கனரக வாகனத்தின் உதவியுடன் காரை நெடுஞ்சாலைப் பகுதிக்கு கொண்டு வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Advertisment

குடியாத்தம் நகரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. சுங்க சாவடியில் சொகுசு கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.