Advertisment

சொகுசுப் பேருந்து மோதி 5 பேர் உயிரிழப்பு; தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

luxury bus collision; Tamil Nadu Government Relief Notification

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் டிராக்டர் மீதுசொகுசுப் பேருந்து மோதிவிபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத்தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சலூரில் இருந்து கற்றாழை அறுப்பு பணிக்காக டிராக்டரில் 12 பணியாளர்கள் ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது சிவகாசியிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து காவேரிப்பட்டினம் அருகே எர்ரஹள்ளி பகுதியில் டிராக்டரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ட்ராக்டரில் பயணித்த முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி, மூன்று மாத பெண் குழந்தை வர்ஷினி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

TNGovernment Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe