Advertisment

டேங்கர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Luxury bus collides with tanker lorry; 4 Lost their live

டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மற்றும் இரு சக்கர வாகனம் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் இறந்த சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து சீர்காழி புறவழிச்சாலை பதற்குடி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய சொகுசு பேருந்து பிறகு கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரம் இருந்தடேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன் பக்கம் பலத்த சேதமடைந்தது.

Advertisment

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பேருந்து நடத்துநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

bus lorry police seerkazhi Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe