Published on 28/01/2023 | Edited on 28/01/2023

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் பல கிலோமீட்டருக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன் பின்னே நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி தனியார் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் மட்டும் லேசான காயமடைந்தார். இதன் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சரப்பாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.