Skip to main content

சென்னையில் இன்று புயல் வருமா...? வெதர்மேனின் விளக்கம்..

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

சென்னையில் இன்று அல்லது நாளை காலை முதல் லுப்னா எனும் புயலால் அதீத மழை பெய்யும் என சமூக  வலைதளங்கில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். 

 

cc

 


சென்னையில் இன்று அல்லது நாளை காலை முதல் லுப்னா எனும் புயலால் அதீத மழை உள்ளது என்று பரவி வரும் புரளிகளை நம்பவேண்டாம். வங்கக்கடலிலும் அரபிக்கடலில் மேலடுக்கு சுழற்சிகள் உருவாகி இருக்கின்றன. அதனால் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை வரும். மேலும் அரபிக்கடலில் இருக்கும் மேலடுக்கு சுழற்சி வரும் நாட்களில் ஓமன் நாட்டை நோக்கி நகரும்  என்று தெரிவித்துள்ளார். அதனால் இதை ஓகி புயல் அளவிற்கு சிந்தித்து யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும். மேலும் சென்னையிலும் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அரசாங்கம் பல விஷயங்களில் புரளியை கிளப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனால் இதுபோன்று புரளி பேசுபவர்கள் இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்