ADVERTISEMENT

''ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமானவன்'' தொண்டரணி நிர்வாகி நினைவஞ்சலியில் எ.வ.வேலு பேச்சு!

09:50 AM Sep 18, 2019 | kalaimohan

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் ( சேர்மனாக ) இரண்டு முறை இருந்தவர் சேஷாசலம். திமுகவை சேர்ந்த இவர் ஒருமுறை சுயேட்சையாக நின்று சேர்மனாக வெற்றி பெற்ற திமுகக்காரர். இவரது மகன் தான் 41 வயதான திருவேங்கடம். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்தாலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாநிலம் முழுவதிலும்மிருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, குறைகள் கேட்டார், அப்போது அறிவாலயம் வந்த கட்சியினரை ஒழுங்குபடுத்தும் பணியில் தனது தொண்டரணியினரோடு சென்று ஈடுப்பட்டவர் திருவேங்கடம். அதேபோல், வேலூர், ஈரோடு, திருச்சி என எங்கு திமுக கூட்டம், மாநாடு நடைபெற்றாலும் திருவண்ணாமலை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திருவேங்கடத்தையும், அவரது மாவட்ட தொண்டரணியையும் அனுப்புங்கள் என கேட்கும் அளவுக்கு தொண்டர்களை, நிர்வாகிகளை ஒழுங்குப்படுத்துவதில் கில்லாடியாக இருந்தார்.

ஓராண்டுக்கு முன்பு திருவேங்கடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 5ந்தேதி மரணத்தை தழுவினார். அவருக்கு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா அவரது வீடு உள்ள துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில் செப்டம்பர் 17ந்தேதி நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ, திருவேங்கடத்தின் அப்பா சேர்மன் சேஷாச்சலம், தீவிரமான திமுக பற்றாளர். அதேபோல் திருவேங்கடத்தின் மாமானார் நடேசனாரும் தீவிரமான கட்சி விசுவாசி. முன்னாள் எம்.எல்.ஏ திருவேங்கடத்தின் மீது கொண்ட மதிப்பால் தன் மகனுக்கு திருவேங்கடம் என பெயர் சூட்டும் அளவுக்கு ஏற்றுக்கொண்டவர்களுக்கு விசுவாசமானர்கள் என்றார்.

படத்திறப்பு விழா செய்தி, புகழாஞ்சலி செலுத்திய மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, கட்சிக்காக அவன் ஆற்றிய பணிகள் என்பது மறக்க முடியாதது. அதனால்தான் அவன் இறந்த தகவல் முரசொலியில் வந்த செய்தியை பார்த்துவிட்டு பல மா.செக்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களது வருத்தத்தை, இரங்கலை தெரிவித்தார்கள். அந்தளவுக்கு தொண்டரணி அமைப்பாளராக இருந்துக்கொண்டு மாநிலத்தின் பல மாநாடுகள், கட்சியின் பெரிய கூட்டங்களுக்கு சென்று பணியாற்றி பெயர் எடுத்தவன்.

என் மகன் கம்பன் இங்கு பேசியபோது குறிப்பிட்டதுபோல் என் குடும்பத்தில் ஒருவனாக திருவேங்கடம் இருந்தான். அவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம், ஆனால் இயற்கையிடம்மிருந்து அவனை காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த குழந்தைகளை கட்சி ரீதியாக மட்டும்மல்ல என் தனிப்பட்ட முறையிலும் அவர்களை நான் தத்தெடுத்துக்கொள்கிறேன் என்றார்.

திருவேங்கடத்தின் நீண்ட கால நண்பர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, கல்லூரி மாணவர் தலைவராக இருந்தபோதே நேரடி அரசியலுக்கு வந்துவிட்டார். உணவு சாப்பிடுவதில் ஆரம்பம் முதலே கவனம் எடுத்துக்கொள்ளவில்லை, அரசியலுக்கு வந்து தொண்டரணி அமைப்பாளராக மாறியபின் டீ, காபி தான் பெரும்பாலான உணவு, நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. பின்னர் அல்சர் வந்தபின்பே சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள துவங்கினார். அதன்பின் டீ, காபி போன்றவற்றை குறைத்துக்கொண்டு மாதுளை, ஆப்பிஸ் ஜீஸ் குடிக்க பழகினார். ஆனால், அவரது உடல் அதற்கு முன்பு அவர் டீ, காபிகள் பிளாஸ்டிக் கப்புகளில் குடித்தது, அவரது உடலில் தீங்கை ஏற்படுத்திவிட்டன.

அதனால் அவர் லிவர் பிரைமரி என்கிற கேன்சரால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் தாக்கியதை கூட நெருங்கியவர்களை தவிர மாற்றவர்களுக்கு சொல்லவில்லை, என்னன்னு தெரியல, டாக்டரை பார்த்துக்கிட்டு தான் இருக்கன்னு சொல்லிக்கிட்டு வந்தார். வேலுவும், அவரது மகன் கம்பனும்தான் மருத்துவ உதவிகள், பொருளாதார உதவிகள் செய்து பார்த்துக்கொண்டனர்.

திருவேங்கடம் அவரது அப்பாவை போன்றே இருக்கற இடத்துக்கு விசுவாசமாதான் இருந்தார். எம்.எல்.ஏ அல்லது எம்.பியாகிடனும்'னு கனவு கண்டார், அரசியலுக்கு வருபவர்கள் பலரின் கனவுதான் அது. தனக்கு எல்லாம்மே ‘எம்பெருமான்’ தான். தன்னை எம்பெருமான் பார்த்துக்கொள்வார், எம்.பியாக்குவார், எம்.எல்.ஏவாக்குவார் என நினைத்தார். அது நடக்காமலே போய்விட்டது. எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் எனது குடும்பத்தை எம்பெருமான் பார்த்துக்கொள்வார் என கடைசி காலத்தில் சொல்லிவந்தார், அவரின் பதவி என்கிற கனவுதான் நிறைவேறவில்லை, குடும்பத்தை பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை கனவை கலைக்காமல் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்றார் கண்ணீரோடு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT