Low vaccine reserves; Thousands of people gathered

Advertisment

திருச்சி மாநகரில் இன்று 4 இடங்களில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, செய்யது முத்து சாப் பள்ளி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, பிஷப் ஹீபர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Advertisment

தடுப்பூசி போடும் முகாமில் ஆயிரம் தடுப்பூசிகள்(கோவிஷூல்டு) கையிருப்பு உள்ளதையடுத்து ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு மையத்திலும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தற்போது தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு மையத்திற்கும் ஆயிரம் தடுப்பூசி டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு தடுப்பூசி போட காத்திருக்கின்றனர். டோக்கன் பெறாதவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.