/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-rmc-art-1_4.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதன் காரணமாகச் சென்னை, நாகப்பட்டினம் காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேலும் இது விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
ஒடிசா - கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ. தொலைவில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - தமிழக கடற்கரை நோக்கி நகரும். அதே சமயம் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை (22.12.2024) காலை 6 மணியளவில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகரக் கூடும்” எனக் கணிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)