Published on 10/10/2024 | Edited on 10/10/2024
சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைத் தொடரும்; அதேபோல் கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மௌய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைத் தொடரும். 14 ஆம் தேதி சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.