தமிழகத்திற்கு ரெட் அலர்ட்; வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!

low pressure area is likely to form over Southwest Bay of Bengal on 22nd

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள்(20.5.2024) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe