Is a low pressure area forming?

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

Advertisment

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது; தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக, அப்பகுதிகளில் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

Advertisment

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.