lovers sought shelter at the SP office in Erode

ஈரோடு சூளை முதலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஈரோடு வீரப்பன் சத்திரம் காவிரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (21). பி.காம் பட்டதாரி. இரண்டு பேரும் கடந்த மூன்று வருடமாகக்காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனினும் காதலில் உறுதியாக இருந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று காலை சென்னிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றித்திருமணம் செய்து கொண்டனர். பின்னர் லோகேஷ் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வந்து பாதுகாப்பு கேட்டுத்தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரின்பெற்றோருக்கும் போலீசார் தகவல் அனுப்பி, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.