Advertisment

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு; மதங்களை கடந்து கரம் பிடித்த காதலர்கள்

lovers incident in tindivanam women police station 

செங்கல்பட்டு பெரிய நத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் திவ்யாவும்(வயது 21), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது மகன் அசேன் என்பவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.இதன் மூலம் இருவரும் அறிமுகமாகி அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 5 ஆம் தேதி திவ்யா அவரது வீட்டில் இருந்து வெளியேறி திண்டிவனத்தில் உள்ள காதலன் அசேன் உடன் வந்துவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சென்னை கோவளம் பகுதியில் உள்ள ஒரு தர்காவில் திவ்யாவை இஸ்லாமியராக மதமாற்றம் செய்து கொண்டனர். அதன் பிறகு இஸ்லாம் மத முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment

இதனையடுத்து நேற்று தம்பதிகள் இருவரும் திண்டிவனம் அனைத்து காவல் நிலையத்திற்கு சென்று தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் போலீசார் காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Chengalpattu lovers police thindivanam Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe