Advertisment

காதலர் தினம்... இதயம் வடிவிலான மலர் மாலை!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14- ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தியா முழுவதும் காதலர்கள் இன்று (14/02/2020) காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி பூங்கா மற்றும் பல்வேறு பூங்காக்களில் இன்று காலை முதலே பைக், கார்களில் வந்து காதலர்கள் திரண்டனர்.

Advertisment

lovers day heart shap flower in erode one of the shop

புத்தாடைகள் அணிந்து வந்த காதல் ஜோடிகள் தங்களது அன்பை வெளிப்படுத்த காதல் பரிசுகள், ரோஜா பூக்கள், இனிப்புகள், சாக்லேட்டுகள் வழங்கி பரிமாறிக் கொண்டனர். சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சினிமா தியேட்டர்கள் மற்றும் முக்கிய மால்களில் காதல் ஜோடிகள் ரோஜாப் பூக்கள் வழங்கி தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் பிரத்யேகமாக இதயம் வடிவிலான மிகப்பெரிய ஒரு மலர் மாலை ஒன்றை கடை முன்பு வைத்த உரிமையாளர் காதலர் தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இது பார்ப்போரை வியக்க வைத்தது.

Erode lovers day
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe